ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் காலத்தில் மலையகத்தில் தமிழ் இலக்கியம் இருந்தது: முன்னாள் வீரகேசரி ஆசிரியர் வி. தேவராஜ் !

0
38

கனடா மலையகா” நூல் வெளியீட்டில் சிறப்புரை.

பாகம் (1)

 

“மலையகப் பெண்களின் கதை கள”; என்ற நூலின் வெளி யீட்டு வி ழாவி ல் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கிய தேடகம்
ஏற்பா ட்டளர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மலையகப்பெண்களின் கதைகள் குறித்து உரை நிகழ்த்திய அன்பு, யாழினி , நிரூபா , மற்றும் மீராபாரதி
ஆகியோருக்கும் இங்கு கூடியிருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது வணக்கத்தை
தெ ரிவித்துக்கொள்கினறேன்.
“மலையகா ” என்ற பெயர்
இன்றைய இந்த வெ ளியீட்டு விழாவில் வெளி யி ட்டு வைக்கப்பட்டுள்ள சிறுகதை த் தொகுப்புக்குச் சூட்டப்பட்டுள்ள
பெ யர் குறி த்து என்னுள் எழுந்துள்ள வினாவி னை அவை யின் முன் வைக்கின்றேன்.
இந்த நூலுக்கு “மலையகா ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்று புரியவி ல்லை .
இன்று இலங்கை யில் மலையக மக்களின் இன அடையாளம் குறித்து பெரிதாகப் பேசப்படுகின்றது. தற்பொழுது இன
அடையாளம் குறித்த கருத்தாடல்கள் சூடுபிடித்துள்ள இன்றை ய நிலை யி ல் “மலையகா ” என்ற புதி ய இன
அடை யாளத்துடன் சிறுகதை த் தொகுதி வெளி வந்துள்ளது.
“மலை யகா “; என்பது இடப்பெயராகவா ? அல்லது இனத்துவத்தை குறிக்கும் பெயராகவா ? சூட்டப்பட்டுள்ளது என்பது
தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
மலையகத் தமிழ் இலக்கியம்
இன்றைய இந்த நிகழ்வில் “மலையகத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளேன்.
மலையக இலக்கிய குறித்து முழுமையாக நா ன் பேசப் போவதி ல்லை . மலையகத்தி ன் எனது அனுபவம் பே சப்படாத
மலை யக இலக்கிய செல்நெ றி குற த்து பேசுவதாகவே எனது இந்த உரை அமையும்.
அந்தவகையில் மலையக இலக்கியம் என்பது 200 வருடகா ல மலையக மககளின் வாழ்வியலி ல் அந்த மக்கள் முகம்
கொடுத்த இரு நூற்றாண்டின் அதாவது 20 தசாப்தகால துன்பியலி ன் வரலாராகும். காலனி த்தவத்தின் கோர
முகத்தையும் அதன் அடக்கு ஒடுக்கு முறை களையும் மீறிபிரவித்ததே மலையக இலக்கியமாகும்..
“மலையகம் 200”
“மலையகம் 200” இன் ஒரு அடையாளமாக இன்றை ய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
“மலையகம் 200” இன் நிகழ்வுகள் காலனித்தவத்தி ன் பிடியில் இருந்து மலையகம் விடுதலையான சுதந்திர
நிகழ்வோ என இன்று பலர் கருதலாம். உண்மையி ல் “மலை யகம் 200” மலையகத்தின் விடுதலையைப் பறைசாற்றும்
நிகழ்வு அல்ல.
ஏனெனில் இன்றும் மலையகமக்கள் அரை காலனி த்துவகட்டமை ப்புக்களுடனும்அதனுடன் இரட்டைச்சகோ தரனாக
இணை ந்துள்ள இனவாத தீசுவாலைகளுக்குள்ளும் பயணிக்கின்றனர் எனபதை இங்கு பதிவி டவி ரும்புகின்றேன்.
அன்று வெள்ளைத்தோல் துரைத்தனததிற்குள் சிக்கி இருந்த மலையகம் இன்று கறுத்த தோல்
துரைத்தனத்திற்குள்ளும் அதனுடன் இணைந்து பயணிக்கி ன்ற இனவாதத் தீ நாக்குகளுக்குள்ளும் சிக்கிக்
கிடக்கி ன்றது. அந்தவகையில் 1.5 மி ல்லியன் மலையக மக்களின் தலை விதி தீ ர்க்கமான இன்னொரு
கட்டத்திற்குள் நுழைய உள்ளது என்று கூறுவதே பொருந்தும்.
மலையக அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களுக்கா க பேச மறுக்கின்ற அல்லது மூடி மறை க்கின்ற மலையகம்
நோக்கிய ஒரு பெரிய ஆபத்தை இன்றைய இளம் கவிஞர்கள் பேசுகின்றனர்.
அதற்கு உதாரணமாக ஏப்ரல் மாத வெளியீடாக வந்துள்ள “தாய் வீடு” இதழில் மல்லி கைப்பூச்சந்தி திலகர்
எழுதி யூள்ள கட்டுரையி ல் இருந்து உதாரணத்தைக்கா ட்ட முடியும்.

“மலையகத்திற்கோர்மனு” என்ற தலைப்பில் இரத்தினபுரி மாவட்டை த்தைச்சேர்ந்த காவத்தை கி ருபாவி ன் கவிதை
இவ்வாறு பேசுகின்றது.
“……இன்றோ ….
கருக்கலைப்பிலோ ர்
இனவழிப்பு
தமிழன்மட்டுமா ?
தமிழும்தான்”…
என்ற இந்தவரிகள் “மலையகம் 200” இன் அடுத்த சவாலாக இருக்கப்போகின்றது.
இன்னும் ஒரு இளந்தலைமுறையினைச் சேர்ந்த கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலை த்துறை சார்ந்த
இரா .சுலக்ஷனா தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகின்றா ர்.
⦁ 1961 ஆம் ஆண்டு தினகரன் இதழில் பிரசுரமாகிய ஒரு கூடை க்கொழுந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப சமுக
மா ற்றங்கள் நிகழாத, மலையக மக்கள் அவர்தம் வாழ்வி யலின் குறியீ டாக அமை ந்து, இற்றை வரை அவர்தம்
வாழ்வியலில் நிலவும் நிலையை , அச்சொ ட்டாகப் பிரதி பலித்துகாட்டுகி றது.
“மாற்றமின்றித் தொடரும் மலையகத்தின் மாற்றத்தை ” நோக்கிய குரலாகவே காவத்தை கி ருபா மற்றும் கி ழக்குப்
பல்கலைக்கழக இரா .சுலக்ஷனா போன்றோ ரது குரல்கள் அமை ந்துள்ளன.
மறைந்த ரா யப்பு யோ சப்பு ஆண்டகை அவர்களின் தீர்க்கதரிசனம்.
2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டபின் அவ்வேளையில் மன்னார் மறை மாவட்ட ஆயராக இருந்த மறைந்த
ரா யப்பு யோசப்பு ஆண்டகை அவர்களை வீ ரகேசரிக்காக நேர்காணல் செயத போது “முள்ளிவாய்க்கால்
பேரழிவை விட மிகமோசமான பே ரழி வை தமிழ் மக்கள் இனி வரும் காலங்களில் சந்திக்க உள்ளனர்” என்று
தெ ரிவி த்தார். அது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே பாதை க்குள் மலை யகமும் “மலையகம் 200”
நி கழ்வுகளுடன் பிரவேசிக்க உள்ளது என்பதை இன்றைய இந்த நிகழ்வில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இந்த ஒரு பின்னணியுடன்; எனது தலைப்புக்கள் நுழைகின்றேன்.

1823 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து மலையகம் நோக்கிய குடிப்பெயர்வு.
1823 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி பெருந்தோட்டப் பொருளா தார எழுச்சிக்கும்
வளர்ச்சிக்குமாக தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட காலகட்டத்துடன் மலையக இலக்கியம் ஆரம்பிக்கின்றது.
1823 ஆம் ஆண்டில் இலங்கையில் காலடி எடுத்து வைத்த தமிழக மக்கள் தமக்கு வழங்கப்பட்ட ஆசை
வா ர்த்தைகளும் வாக்குறுதிகளும் தமக்கு சுபீட்சத்தை யும் வளமான வாழ்வையும் வழங்கும் என்ற எதிர்
பார்ப்புடனேயே இலங்கைத்தீவில் வந்திறங்கினர்.
ஆனால் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் ஆசை வா ரத்தைகளும் தாம் இலங்கை மண்ணில் காலடி எடுத்து
வை த்த போதே கடலுக்குள் வீசப்பட்டதை உணர்ந்தனர். எனவே இந்த இரு நூற்றா ண்டு கால மலையக இலக்கியம்
1823 ஆண்டுடன் ஆரம்பி க்கி ன்றது என்ற எடுகோல் முன் வைக்கப்படுகின்றது.
கண்டி மன்னரான சிறி விக்ரமராஜசிங்கன் காலத்தில் தமிழ் இலக்கிய பாரம்பரியம் ஒன்று இருந்துள்ளது. இதனை
மலையக இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவரும் மலையக இலக்கிய ஆய்வா ளருமான சாரல்நாடன் மலையக
இலக்கிய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
⦁ இலங்கை மண்ணில் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தோட்டப்புற வாழ்க்கையும் அதற்கு முற்பட்ட கண்டி
மன்னன் காலத்தினதும் கருவாப்பட்டைக்காலத்தி னதும் வாழ்க்கை யில் எழுந்த இலக்கிய வடிவங்கள்
காணக்கிடைக்கவில்லை என்று சாரல்நாடன் தனது முகவுரையில் குறிப்பி ட்டுள்ளா ர்.
⦁ இந்த உண்மை யா ல்தா ன் இன்று அவை களை த் தே டிக் கொ ள்வதி ல் சி ரமப்படுகி ன்றோ ம். இலங்கை யி ல் கடை சி
மன்னனா கக் கொ ள்ளப்படும் ரா ஜசி ங்கன் பற்றிய அக்கறையோ அவர்காலத்துக் கா வி யமா ன “சின்ன முத்து” கதை
குறி த்த அக்கறை யோ நமக்கு இல்லாததால் அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கி யங்களைப் பறிகொடுத்து
விட்டோம். இதனை தனியார் நூலகங்களிலும் விகாரைகளிலும் சுவடித்திணை க்களங்களிலும் தேடி அலைகின்றோம்
என கூறுகின்றார்.
உண்மை யில் கடைசி கண்டி அரசன் 1815 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டபோ து அவரும் அவருடைய குடும்பமும்
வேலூருக்கு நா டுகடத்தப்பட்டனர்.என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அவரது பரம்பரையினர்
தமிழர்களாவும் சி ங்களவர்களாகவும் குருநாகல பகுதியை அண்டிய பி தே சங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் . வருகின்றனர். கடைசி கண்டி மன்னனனின் நினை வுதினத்தை இன்றும் அவர்கள் ஒன்று கூடி அநுஸ்டித்து
வருகின்றனர் .; இந்தப் பரம்பரையைச் சேர்ந்த ரமேஸ் என்ற சுதந்திர ஊடகவியலா ளர் கடந்த வருடம் காலமா னா ர்.
இந்தக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டா ல் பல தகவல்களை ப் பெறக் கூடியதா க இருக்கும்.

தொடரும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here