மத்திய மாகாண நுவரெலியா மாவட்ட பெரிய டன்பார் கீழ் பிரிவு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தீர்த்த பவனி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
மஹா கும்பாபிசேகத்தினை நிகழ்வினை முன்னிட்டு இன்று 06 ம் திகதி காலை 6.30 மணிக்கு தருண கணபதி ஷோடஷ உபசார பூஜை,ஆச்சார்ய சாந்தி அனுஷ்ட்டானம்,சூர்யாக்கினி,விஷேட நவகிரக ஹோமம்,சிப்பாச்சார்ய சம்பாவனை, தூபிஸ்தாபனம், உள்ளிட்ட சமய கிரிகைகள் நடைபெற்று ஹட்டன் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து மேள தாள இசை முழங்க யானை பவனிவர தீர்த்த மெடுத்தல் இடம்பெற்றன..
குறித்த ஊர்வலம் ஹட்டன் நகரத்தின் பிரதான வீதியூடாக சென்று ஆலயத்தினை வந்தடைந்தன.
குறித்த ஊர்வலத்தில் கலை சாரசார அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
நாளை மற்றும் நாளை மறுதினம் எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 09 திகதி காலை 9.மணிக்குஉச்சிஷ்ட கணபதி ஷோஷட உபசார பூஜை, 06ம் கால யாக பூஜை,மஹா பூர்ணாகுதி,திபாராதனை,நவக்தி அர்ச்சினை,சதுர்வேத பாராயணம், உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று மஹா கும்பாபிசேக பெருவிழா நடைபெறவுள்ளன.
கும்பாபிசேக பிரதிஷடா பிரதமகுரு சிவ ஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள்,குருக்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மலைவாஞ்ஞன்