இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் “வரவிருக்கும் நாட்களில்” விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள் என்பதோடு காசாவில் இராணுவம் குறைக்கப்படும் எனவும் எளிதான வழி அல்லது கடினமான வழியில் அது அடையப்படும் எனவும் அவர் கூறினார்.
ஹமாஸ் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு , அதில் அமெரிக்க ஜனாதிபதியின் அமைதித் திட்டத்தின் கீழ் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டது, ஆனால் ஆயுதங்களை கைவிடுவதாக எந்த கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை
இதே நேரம் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் தொடர்ந்து “படுகொலைகளை” செய்து வருவதாகவும், இஸ்ரேல் மீது உலகளாவிய அழுத்தத்தை வலியுறுத்துவதாகவும் ஹமாஸ் சனிக்கிழமை கூறியது.
இதேநேரம் இரு தரப்புக்கும் இடையிலான மறைமுக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் திங்களன்று எகிப்தில் தொடங்க உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தத்தில் தலையிட்டுள்ள நிலையில் ஹமாஸின் “தாமதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று கூறி இருந்தார்.
தனது ட்ருத் சோசியல் மீடியா பதிவின் ஊடாக , டிரம்ப் “ஹமாஸ் விரைவாக நகர வேண்டும், இல்லையெனில் அனைத்து பந்தயங்களும் நிறுத்தப்படும்… இதை விரைவாகச் செய்வோம்.” என கூறி இருந்தார்.
இதை அடுத்து ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.