சிறுபிள்ளைகள், கொலை முதலான பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறித்த செய்திகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் ஜேர்மன் காப்பகம் ஒன்றில், 11 வயது சிறுவன் ஒருவன் 10 வயது சிறுமியைக் கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள, Wunsiedel என்ற இடத்தில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் இளைஞர் காப்பகத்தில், சிறுமி ஒருத்தி தனது அறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள், அதே காப்பகத்தில் தங்கியிருக்கும் 11 வயது சிறுவன் ஒருவனைக் கைகாட்டியுள்ளன.
ஜேர்மன் சட்டப்படி குற்றச்செயலுக்கு பொறுப்பேற்கும் வயது வராததால், அந்தச் சிறுவன் பாதுகாப்பான காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், தங்களுடன் தங்கியிருந்த சிறுமி ஒருத்தி கொல்லப்பட்டதால், அந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் மற்ற சிறுவர் சிறுமியர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
கடந்த மாதம், லூயிஸ் என்னும் 12 வயது சிறுமியை அவளது சக மாணவிகளான 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் பல முறை குத்திக் கொலை செய்த விடயம் ஜேர்மனியே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.