10 வீத மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டம்!

0
73

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று மாலை பேச்சு நடத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார்

இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here