100% பெறுபேறுகளுடன் வரலாற்று சாதனை படைத்துள்ள மெராயா தேசிய பாடசாலை

0
156

2022 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் மெராயா தேசிய பாடசாலை இம்முறையும் 100% பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றது.

குறித்த பாடசாலையில் இருந்து 51 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 40 மாணவர்கள் 100 க்கு அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர். மேலும் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

☞Paramanathan Divesh – 174
☞Chandramohan Divinesh – 172
☞Sudhahar Vidhusaran – 163
☞Anantharaj Anushika – 150
☞Lankeshwaran Kirushika – 149
☞Thilaganathan Yuwedhiks – 143

சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர். சிறப்பாக பாடசாலையின் அதிபர் ஆர்.கோவிந்தராஜ் தரம் 5 மாணவர்களின் பகுதி தலைவர் எஸ்.ஜெயந்தினி வகுப்பாசிரியர்களான கிருஸ்ணராஜா, அருணோதயம் மற்றும் பாடசாலை நிர்வாகத்தை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தனித்துவத்தை தொடர்ச்சியாக நிலைநாட்டும் இப்பாடசாலை இந்த வருடத்தில் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளதும் சிறப்பம்சமாகும்.

 

ராசையா கவிஷான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here