100 ரூபாவாக குறைகிறது பாணின் விலை! வெளியானது தகவல்!

0
208

பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்புக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பகத் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாண் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைக்கப்படுமே தவிர, அதிகரிப்பதற்கு தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஒரு இறாத்தல் பாண் 150, 160, 170 ரூபா என்ற விலைகளிலும், இன்னும் சில பகுதிகளில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த என்.கே.ஜயவர்தன, அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாததுள்ளதால் வெதுப்பக உற்பத்திகளின் விற்பனை, 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வால், வெதுப்பாகத் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, வெதுப்பாகத் தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், இந்த தொழிலைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதால் இந்த சுமைகளை வெதுப்பக உரிமையாளர்களுக்குத் தாங்கிக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெதுப்பகத் தொழிலைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளால் 7,000 வெதுப்பகங்களில் சுமார் 5,000க்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளதாக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here