12 மணியே இல்லாத கடிகாரம்: இந்த நாட்டில்தான் உண்டு

0
52

பொதுவாக 12 மணி வரையில் இருக்கும் கடிகாரத்தைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், 11 மணி வரையில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்ததுண்டா?சுவிட்சர்லாந்தின் வடமேற்கு நகரமான சோலோதர்ன் நகரில்தான் இப்படியொரு கடிகாரம் உண்டு. அங்கே 12 மணியே ஆகாதாம்.

சோலோதர்ன் நகர மையத்திலுள்ள டவுன் சதுக்கத்துக்கு முன்னாலுள்ள இந்த கடிகாரத்தைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர்.இந்த நகரத்தில் 11 அருங்காட்சியங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் என பெரும்பாலும் 11ஐ அடிப்படையாகக் கொண்டே அனைத்தும் அமைந்துள்ளன.

2000 வருடங்களுக்கு முன்னர் சோலதர்ன் நகரம் ரோமானியர்களால் நிறுவப்பட்டது. 1215இல் 11 நகரசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.1481இல் 11 ஆவது மாகாணமாக சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. அச் சமயத்தில் 11 நகர காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின் 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந் நகரத்தில் கட்டப்பட்ட புனித அர்சஸ் தேவாலயத்தில் 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள், 11 மணிகள் மற்றும் கட்டுமானத்துக்கு 11 வகையான கற்களும் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு 11க்கும் இந் நகரத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் இந்தக் கடிகாரத்தில் 12 ஆவது மணி இல்லாதது குறித்து சரியான காரணம் தெரியவில்லை. இன்று வரையில் இதுவொரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here