மஹியங்கனை, ஆரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஆவார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் அயலவர் எனவும், அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் வன்புணர்விற்கு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.