ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் ஒன்றை விற்பனை செய்யும் போது 2,000 ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.5 நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றிற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 4,662 ரூபா செலவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது
தற்போது எனினும் 12.5 நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் 2,675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தை கொண்டு செல்வதற்காக எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நீண்ட நாட்களாக நாட்டில் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நேற்று சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை 3,500 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.