கோலிக்கு என்னாதான் ஆச்சு? ஆர்சிபி அணியை சிதைத்த கொல்கத்தா.

0
192

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 31 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.

இலங்கை நேரப்படி அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணியின் சார்பில் அதிகபடியாக தேவ்தத் படிக்கல் 22 ஓட்டங்களை பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் குறைந்தளவான ஓட்டங்களை ரோயல் செலஞ்சர்ஸ் பெற்றுக்கொண்டது. அபாரமாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் அண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 94 ஓட்டங்களை  பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஸ் ஐயர்  சிறப்பான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

சுப்மன் கில் 48 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்ததுடன், வெங்கடேஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here