13 மணிநேரம் வரிசையில் நின்று மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய பிரபலம்

0
9

இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்த வருவதால், கி.மீ.கணக்கில் வரிசைகள் நீண்டு செல்கிறது.மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

47 வயதான கால்பந்து நட்சத்திரம் ராணி எலிசபெத்தை கௌரவிப்பதில் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறினார்.

‘நான் உன்னை நேசிக்கிறேன். இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்” என்று பெக்காம், வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here