13 வயது சிறுமியை கடத்தியவர் சிறுமியுடன் மாயம்! மக்கள் உதவிய நாடிய காவல்துறை

0
118

மொனராகலை – இங்கினியாகல பிரதேசத்தில் இருந்து 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற 47 வயது கொண்ட ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தனது மகள் தன்னிடம் இருந்து கடத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, சுமித் குணவர்தன என்ற பெயரைக் கொண்ட குறித்த நபர் தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இங்கினியாகல காவல்துறை பொறுப்பதிகாரியின் 0718 59 11 50 என்ற இலக்கத்துக்கோ, இங்கினியாகல காவல் நிலையத்தின் 063 2 24 20 22 என்ற இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here