பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

0
106

வெங்காயத்தை பயன்படுத்தாத உணவு என்று எதுவும் இருக்காது. சைவ முதல் அசைவம் வரை எல்லா உணவிலும் வெங்காயம் சேர்ப்பது உண்டு.சிலர் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதும் உண்டு. ஒரு சிலர் வெங்காயத்தை ஒதுக்குவதும் உண்டு.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது. பச்சையாக வெங்காயத்தை சாப்பிடும்போது ஜீரண சக்தியை அதிகரித்து பசியை உண்டாக்கும். இதில் சிவப்பு வெங்காயம் உடலுக்கு நல்ல கொழுப்பை அதிகரிப்பதுடன் Vitamin B,C சத்துக்கள் உள்ளது.

பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் தூக்கமின்மை, புற்றுநோய், இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது மேலும் எலும்புகளுக்கும் நல்லது. வெங்காயத்தின் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதால் சளி, காய்ச்சலுக்கு நல்லது, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சிலர் கால் வலி, அதிகமாக நிற்பதால் வரும் கால் வலிக்கு பச்சை வெங்காயம் நல்லது. வெங்காயத்தில் Anti-Bacterial, Anti-Fungal இருப்பதால் கூந்தல் வளர்வதற்கு உதவும். தயிருடன் பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு வலிமையை தரும். தேள்,குளவி கொட்டின இடத்தில் பச்சை வெங்காயத்தை வைத்தால் எரிச்சல் இருக்காது.

பல் வலிக்கும்போது பற்களிள் பச்சை வெங்காயத்தை வைப்பதால் வலிகள் இருக்காது.ஆலிவ் ஆயிலுடன் சம அளவில் வெங்காயத்தின் சாறை சேர்த்து முகத்தில் தடவுவதால் முகப் பொலிவை தருவதுடன் சரும பிரச்சனை இருக்காது. பச்சை வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இனிமேல் வெங்காயத்தை ஒதுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here