145 ஆலயங்களுக்கு கடந்த 10 நாட்களாக சென்ற ரதபவனயில் சென்ற ஜோதிலிங்கம் இன்று 22 ம் திகதி இரவு 11 மணியளவில் லக்ஸபான பிரம்ம குமாரிகள் ஆன்மீகக் கண்காட்சி கூடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த இரதபவனி கடந்த 13 ம் திகதி தலவாக்கலை சென் கூம்ஸ் மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று தேவார திருவாசகம், பாட மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆரம்பமாகின.
இந்த ஜோதிலிங்க இரதபவனி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களான தலவாக்கலை ,லிந்துலை,கொட்டகலை,ஹட்டன்,நோர்வூட் பொகவந்தலா,மஸ்கெலியா,வட்டவளை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆலயங்களுக்கும்,அதனை சுற்றியுள்ள தோட்டங்களில் உள்ள 100 மேற்பட்ட ஆலங்களுக்கு சென்று இன்றைய தினம் மறே,வலதல,லக்ஷபான்,வாழமலை ஆகிய தோட்ட ஆலயங்களுக்கு சென்று பக்தர்களின் பக்தி பரவசத்துடன்,ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த ஜோதி லிங்கத்திற்கு தோட்ட மக்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் பூஜைகளை செய்து வழிபடுவதனை காணக்கூடியதாக இருந்தன.
இதன் போது தியானம் ,படவிளக்க காட்சி விசேட பூஜைகள் ஆகியனவும் இடம்பெற்றன
.
இந்தியாவின் மிகவும் பழைமை மிக்க மகிமை வாய்ந்த ஜோதிலிங்கர்களின் தரிசனத்துடன் குறித்த ஜோதிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களுக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இந்த ஜோதிலிங்க தரிசனம் நுவரெலியா மாட்ட மக்களுக்கு கிடைத்த அபூவ சிவபாக்கியம் என்பதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஜோதிலிங்கத்தினை தரிசித்து வழிபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்