ஹட்டன் லெதண்டி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.