எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலைத்திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின் கட்டண குறைப்பு தொடர்பில் மக்கள் எழுத்து மூலம் யோசனைகளை முன்வைக்கும் காலம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.