17 வயது பாடசாலை மாணவி தற்கொலை

0
32

பாடசாலை மாணவியொருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று (7) தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளதாகவும் உறவை நிறுத்துமாறு பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவி இறப்பதற்கு முன்னர், கைகளை வெட்டி, இரத்தத்தினால் கடிதமொன்றினை எழுதி குறித்த நபருக்கு அனுப்பியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் பிரேதப் பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று அலவத்தன்ன பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here