மத்திய பிரதேசம் இந்தூரில் ஸ்வார்ன் பாக் காலனியில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்தது.
இதில் 7 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் மின் இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பால் தீ பற்றி பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
தீயை அணைக்க 3 மணி நேரம் ஆனதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளது.