கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையின் கீழ் பிரதான கூட்ட மண்டபத்தில் (2022.03.04) திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் உரையாற்றுகையில், கொட்டகலை பிரதேச சபைக்கு 2022ம் ஆண்டுக்கு அபிவிருத்தி விடயங்களுக்காக அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் முதலாம் கட்ட வேலைகள் நிறைவு பெற்றதன் பின்னதாகவே சுயதொழில் ஊக்குவிப்புக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதால் மிக விரைவாக முதலாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் விரைவாக செய்து முடிக்குமாறும் அறிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அவர்களுக்காக உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்காக ஆளுனர் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதால் எதிர்வரும் நாட்களில் அவர்களுக்கான உணவு பொதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு. 2022ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச சபையின் ஊடாக கௌரவிப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, கொரோனா பாதுகாப்பு வேலைத்திட்டங்கள், சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்