2022 டி20 உலக கிண்ணப் கோப்பையை தனவசமாகியது இங்கிலாந்து அணி!

0
87

பாகிஸ்தான் அணியை வென்று இங்கிலாந்து அணி டி20 உலக கிண்ணத்தை கைபற்றியுள்ளது.

டி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (13-11-2022) மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் கேட்பன் பாபர் அசாம் 28 பந்துகளில் 32 ஓட்டங்களையும், ஷான் மசூத் 28 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்தனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 4 ஓவரில் 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

138 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 1 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டின் உலக கிண்ணத்தை வெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றியடைய செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here