2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இறுதி முடிவுகள் அடுத்த வாரத்தில்

0
81

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் திகதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதற்காக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளைப் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதேவேளை பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here