21ஆம் திருத்தச் சட்டம் ஊடாக நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது

0
105
அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதன் ஊடாக நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர மண்டப பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது நினைத்து கூட பார்க்க முடியாதளவில் சரிந்துள்ளது.

அதனை சீர் செய்ய வேண்டிய தேவையுள்ளது.

20ஆம் திருத்தச் சட்டத்திற்கு மாற்றீடாக 21ஆம் திருத்தச் சட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கூறுகிறார்.

இதுவரை எவ்வித சட்டமூலங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

20ஆம் திருத்தச் சட்டத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன்.

எனினும், 21ஆம் திருத்தச் சட்டத்தால் நாட்டின் பொருளாதார நிலைமையை சீர் செய்ய முடியாது.

எனவே நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான முன்னுரிமைகளை வழங்க வேண்டும்.

21ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதன் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு, 19ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதனை ஒரு திருப்பு முனையாக கருத முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here