நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்ற இந்த சூழ்நிலையில், அவசர நோய்களுக்காக 1990 என்ற இலக்கத்தை அழைத்து, நோயாளர்களை இலவசமாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்ல முடியும்.
திடீர் விபத்துக்கள், இருதய நோய்கள் உள்ளிட்ட எந்தவொரு நோய் நிலைமை ஏற்பட்டால், சுகாதார அமைச்சினால் இலவசமாக செயற்படுத்தப்படும் 1990 அம்பியூலன்ஸ் சேவையை உடனடியாக அழைத்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது போன, இரண்டு நாட்களேயாக சிசுவொன்று உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு நிலவினாலும், குறித்த அம்பியூலன்ஸ் சேவை 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படுகின்றது.
இதனால், நோயாளர்களை உரிய வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்க 1990 அம்பியூலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியும்.