25 ஆண்டுகளாக வெட்டாத நகம்: கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சாதனை

0
42

வித்தியாசமான நிகழ்வுகள், கடினமான நிகழ்வுகள், நம்மை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகளை செய்யும்பட்சத்தில் அவர்களின் பெயர்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும்.

அந்த வகையில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக ஒரு பெண் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த டயானா ஆம்ஸ்ரோங் என்ற பெண் கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து அவரது கை விரல்களின் நகத்தை வெட்டாமல் வளர்த்து வந்துள்ளார்.

இவரது நகங்களின் நீளம் 13 மீட்டர் ஆகும். அதாவது 42 அடி 10 இன்ச்.2022ஆம் ஆண்டளவில் டயானாவின் நகங்கள் தரையில் இழுத்துச் செல்லும் அளவுக்கு நீளமாக வளர்ந்துள்ளன. நகங்கள் உடைந்து விடாமல் மிகவும் பாதுகாப்பாக இருந்ததோடு விதவிதமான நகப் பூச்சுக்களையும் பூசி அழகுபடுத்தியுள்ளார்.

இந்த நீண்ட நகங்களை வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. டயானாவால் மற்றவர்களைப் போல் இயல்பாக குளிக்க முடியாதாம். பணிக்குச் செல்வதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.

நகங்கள் உடைந்துவிடாதபடி பேப்பரால் சுற்றிக் கட்டியுள்ளார்.

கொஞ்சம் நகங்கள் வளர்ந்துவிட்டாலே அதனை பாதுகாப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வோம். கடந்த 25 வருடங்களாக இவ்வளவு பெரிய நகத்தை பாதுகாத்து வளர்த்த பெண்ணுக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்கொடுப்பது நியாயமானதே.

https://www.instagram.com/p/C6YZZD3Na78/?utm_source=ig_embed&utm_campaign=loading&img_index=1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here