யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.
யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல் | Cow Killed In Jaffna
இதன் காரணமாக கணவரின் தரப்பினர், பிரச்சினையில் தலையிட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்கு சென்று அங்கு நின்ற 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.