3 வயது சிறுமியின் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் குங்குமம் திணிப்பு – கண்கலங்க வைக்கும் சம்பவம்

இந்தியா தமிழ்நாடு ஆத்தூரில் நெல்லூர் பகுதியினை சேர்ந்தவர் தான் வேணுகோபால். இவறிற்கு அழகான மூன்றே வயதே ஆன புணர்விகா என்ற மகள் உள்ளாள். வேணுகோபால் பொக்லைன் இயந்திரம் ஒன்றினை வைத்து தனது வாழ்க்கையினை ஓட்டி வருகின்றார். தற்சமயம் தொடர்ந்து இவருடைய தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஒரு சூனியக்காரனிடம் சென்றுள்ளார். சூனியக்காரனிடம் தனது தொழில் நன்றாக இருப்பதற்கு என்ன செய்வது என கேட்கவே அவன் மூன்று வயதே ஆன புணர்விகா என்ற மகளை இறைவனுக்கு பலி கொடுத்தால் தங்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என கூறியுள்ளார். அதை கேட்ட அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கூட யோசிக்காமல் தமது தொழில் வளர்ச்சியடையும் என நம்பி தாம் பெற்ற மகளையே இறைவனுக்கு பலி கொடுக்க முன்வந்துள்ளனர்.

அவ்வாறே வியாழக்கிழமை அன்று நள்ளிரவில் சிறுமியினை பலி கொடுக்க ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. புனர்விகாவுக்கு நள்ளிரவு நேரத்தில் தண்ணீருடன் மஞ்சளை கலந்து அபிசேகம் செய்து ஏராளமான குங்கும பொடியினை வாயில் வைத்து திணித்துள்ளனர். அதற்கு பின்னர் பலி கொடுக்கும் இடத்திற்கு கூட்டி சென்று மூன்று வயதே ஆன அந்த பச்சிளங் குழந்தியனை கை கால்களை இறுக்க கட்டி பலி கொடுக்க ஆயத்தம் செய்துள்ளனர்.

தம்மை சுற்றி நடப்பவற்றை கொஞ்சமும் புரிந்து கொள்ளாத அந்த குழந்தை பயத்தில் அலறியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அயலவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமியினை மீட்டு போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பூசை செய்த குறித்த பூசாரியையும் தாய் மற்றும் தகப்பனையும் அதே அறையில் வைத்து பூட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புணர்விகவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருந்தும் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் சென்னையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாள்.

பலநேர கஷ்டங்களுக்கு மத்தியில் சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது. வாயில் குங்குமத்தை திணித்ததன் விளைவாக மூச்சு திணறினால் சிறுமி உயிரிழந்ததாக வைத்தியர்கள் கூறுகின்றனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பூசாரி மற்றும் பெற்றோர்களின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஏதோ ஒரு சூனியக்காரனின் கதையினை நம்பி தமது தொழில் விருத்தி அடைய வேண்டும் என்ற ஆசையில் தமது மூன்றெ வயதான மகளை பலி கொடுக்க முன்வந்த தாய் மற்றும் தந்தையின் செயல் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.