மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயகொடி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின்படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
“அவசரப்பட வேண்டாம், இன்னும் சற்று பொறுமையாக இருங்கள். 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்போம் என்று எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.




