4 அல்லது 13 என்ற இலக்கங்களில் அழைப்பு வந்தால் கைபேசி வெடிக்குமா??

0
46

4 அல்லது 13 என்ற இலக்கங்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்பிற்கு எக்காரணம் கொண்டும் பதிலளிக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலளித்தவுடன் தொலைபேசி வெடித்து விடும் எனவும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளுக்கு இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு பதிலளித்துள்ளது. இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

13 அல்லது 4 இல் தொடங்கும் எண்ணிலிருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எந்த சூழ்நிலையிலும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளித்தவுடன் உங்கள் தொலைபேசி வெடிக்கும். இது ஏற்கனவே சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் நடந்து பலர் இறந்துள்ளனர். அது இலங்கையையும் பாதிக்குமா என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், 13 அல்லது 4 என்ற எண்ணில் தொடங்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்’ என காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

எனினும், அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கையடக்கத் தொலைபேசிகள் வெடித்ததாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்கும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உற்பத்தி குறைபாடு காரணமாக தொலைபேசி வெடிக்கக்கூடும், ஆனால் ஒரு அழைப்பு அவ்வாறு செய்யாது என்றும் இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here