நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலையில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 40,000 ரூபாவை நெருங்கியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நெருக்கடியால் பெரும்பாலானோர் போக்குவரத்திற்காக, துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சந்தையில், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக துவிச்சக்கர வண்டியின் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்துள்ளார்.