49 விநாடிகளில் 80 வயது பாட்டியின் அசத்தலான முடிவு

0
30

உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமானோர் சாதிப்பதை நாம் அதிகம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சூழலில், 80 வயது மூதாட்டி ஒருவர், விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு அதில் சாதித்துள்ள விஷயம், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயம் ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டப் பந்தயத்தில், சுமார் 80 வயதுமிக்க பிரி தேவி பரலா என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போட்டி ஆரம்பித்ததுமே தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டும், கைகளைத் தட்டிக் கொண்டும் குஷியாக பந்தயத்தில் இறங்கி ஓடத் தொடங்கிய மூதாட்டி எங்கேயுமே நிற்காமல் 100 மீட்டர் தூரத்தை 49 வினாடிகளில் கடந்திருக்கிறார்.

அவர் ஓடும் போது சில திரைப்படத்தில் வரும் பாடல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அங்கே உள்ளவர்கள் ஒலிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் இன்னும் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த பாட்டி வெள்ளை நிற சேலை அணிந்தபடி விளையாட்டு சப்பாத்து அணிந்து கொண்டு பந்தயத்தில் பங்கேற்று இலக்கையும் அடைந்துள்ளார்.

80 வயதில் இப்படி ஒரு அர்ப்பணிப்புடன் போட்டியில் பங்கேற்ற மூதாட்டி பிரி தேவி பரலா, இன்றைய காலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார் என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here