இ.தொ.காவிலிருந்து வெளியேறிய கருப்பையா ஜெயராம் தனக்கெதிராகவும் இதொ.காவிற்கு எதிராகவும் சேறு பூச முற்படுவதாக கூறி நுவரெலியா பிரதேச சபை தலைவரும் இ.தொ.காவின் உப தலைவருமான வேலு யோகராஜ் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கந்தப்பளை காவல் நிலையத்திலேயே (02/06/2022) வியாழக்கிழமை இம்முறைப்பாடை முன்வைத்துள்ளார்.அதாவது தன்மீது அபாண்டமான பொய்களையும் வதந்திகளையும் பரப்பி வருவதாகவும் இதனால் தனக்கு ஐந்து கோடி நஸ்ட ஈடு வேண்டுமெனவும் கோரியே இம் முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த வேலு யோகராஜ் முன்னாள் இ.தொ.காவின் உப தலைவராக செயற்பட்டு வந்த கருப்பையா ஜெயராம் என்பவர் கட்சி பெயரை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றியவர் அதை மக்களும் நன்கு அறிவார்கள் தனக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கு குறைந்தமையால் வேறு வழியின்றி வேறு பக்கம் கட்சி தாவியுள்ளார்.தாவியமைக்காக ஏதோ உளரி வைத்துள்ளார்.
எனவே இவரின் அபாண்டமான வதந்தியால் மான நஸ்டஈடு கோரி 5 கோடி ரூபாய் மான நஸ்ட ஈடு கோரி பொலிஸீல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்