6 மாத சிசுவொன்றில் சிசுவின் சடலம் மீட்பு- mலிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை!.

0
10

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் 10.06.2022 அன்று சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,அப்பகுதியில் சென்ற சிலர் சிசுவின் சடலத்தை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here