60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

0
120
மேல் கொத்மலை ஆற்றுக்கு அருகாமையில் வாழும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக இந்த ஆற்றையே பயன்படுத்தி வருகின்றனர்;.ஆனால் குறித்த ஆற்றில் அம்பேவெல பாற்பண்ணையின் மாட்டு சாணம்,மற்றும் இராசயன கழிவுகள் விடுப்பதாகவும் இதனால் ஆற்று நீர் அசுத்தமடைந்த கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த சூழல் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலாளர்,உட்பட பொறுப்பு வாய்ந்த பலருக்கு அறிவித்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அம்பேவெல காட்டுப்பகுதியில் ஊற்றெடுக்கும் மேல் கொத்மலை ஓயா எல்ஜின் ஊவா கலை, தங்கக்கலை, லிப்பகலை, மெராயா, என்போல்ட், கலிரோணியா, அக்கரகந்த, நாகசேன, லிந்துல, தலவாக்கலை,உள்ளிட்ட பிரதேசங்களை கடந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றன.
இந்த ஆற்று நீரினை சிலர் குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும், ஆடைகளை கழுவுவதற்காகவும், நீராடுவதற்காகவும் பலர் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்
இந்நிலையில் குறித்த ஆற்றில் பாற் பண்ணையின் கழிகள் கலக்கப் படுவதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்;.
விடுமுறை தினங்களில் சிறுவர்கள் நீராடுவதற்கு இந்த ஆற்றினை பயன்படுத்தி வந்த போதிலும் நீர் அசுத்தமடைந்து காணப்படுவதனால் சிறுவர்களின் பொழுதுபோக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆற்று நீரினை பயன்படுத்துவதன் காரணமாக பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆற்று நீரினை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்ட பலர் தற்போது இந்த நீரினை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயன்படுத்தும் போது செடிகள் இதில் காணப்படும் இரசாயன கலவைகள் காரணமாக கறுகி போவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
வரட்சியான காலப்பகுதியில் பலர் குடிப்பதற்கு இந்த ஆற்று நீரினை பயன்படுத்துவதாகவும் இந்நிலையில் தற்போது ஆற்று நிரை பயன்படுத்த முடியாத பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்;.
சாதரண மக்கள் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு எடுக்கும் போது மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் விழிப்புடன் காத்திருக்கின்றனர்

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here