இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட கூரை மீதான சூரிய மின் படலத்தை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 630 மில்லியன் மின்சார அலகுகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில், இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோர் இந்த தனித்துவமான தேசிய நோக்கத்திற்காக ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையிலிருந்து விலகி, புதிய தொழில்நுட்ப அனுபவத்தின் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்பனை செய்வதற்கு நுகர்வோர் திரும்பியுள்ளனர்.
இதற்கான ஒத்துழைப்புகளை வழங்குபவர்களுக்கு இலங்கை மின்சார சபை பாராட்டு தெரிவிப்பதாக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.