நுவரெலியா மாநகர சபையை இ.தொ.கா கைப்பற்றும்- சிவன்ஜோதி யோகராஜா தெரிவிப்பு!!

0
179

நுவரெலியா மாநகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும். அதேவேளை இந்த
சபையின் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் தக்கவைக்கும் பட்சத்தில் தமிழர் ஒருவரும் மேயராக
வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.   என நுவெலியா வட்டாரம் இரண்டில் நுவரெலியா மாநகர சபைக்கு போட்டியிடும் சட்டத்தரணி
சிவன்ஜோதி யோகராஜா தெரிவித்தார்.
நுவரெலியா மாரகர சபை தேர்தல் தொடர்பில் வாக்காளர் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டம்
ஒன்று (20) சனியன்று  அன்று நுவரெலியா யுனிக்வீவ் பகுதியில்  இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது.
நுவரோலியா மாவட்டம்  வலப்பனை ,ஹங்குராங்கெத்த, கொத்மலை, அம்பகமுவ, நுவரெலியா
என ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை கொண்ட அதிகளவான தமிழர்களை கொண்ட
மாவட்டமாகும்.
ஆனால் நுவரெலியாவில் மாத்திரமே மாநகர சபை காணப்படுகின்றது.
இம்  மாநகர சபையின் கட்டுப்பாட்டு பகுதிகள் நூற்றுக்கு 75 % விகித தமிழ் பேசும் மக்களின்
ஆதிக்கத்துக்கு உள்ளானவையாகும்.       .
மாநகரத்தின்  சபையின் ஆட்சி மற்றும்  அதிகாரத்தை எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில்
தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்   கைப்பற்ற
வேண்டும்.
அப்போதுதான்   தமிழ் பேசும் மக்களின்  ஆதிக்கத்தையும் இருப்பையும் உறுதியாக்கி
தலைநிமிர்ந்து  வாழ முடியும் என்றார்.
கடந்த காலங்களில் பெரும்பான்மையான கட்சிகளின் ஆட்சியில் இம்மாநகர சபையின்
அதிகாரங்கள் காணப்பட்டது.ஆனால் தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் அபிவிருத்திகள்
எதிர்பார்த்த வகையில் பூர்த்தி செய்யப்பட்டதா .
ஒரு தருனத்தில் இம்மாநகர சபைக்குள் தமிழ் பிரதநிதி ஒருவரை பதில் முதல்வராக கூட நியமிக்க
முடியாத இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால் இந்த நிலமையை மாற்றியமைக்க சிறந்த தமிழ் முதல்வரை நாம் தேர்ந்தெடுக்க
நல்லதோர் சந்தர்ப்பம் நமக்கு எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில்  கிடைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த   நுவரெலியா மாநகர சபைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
தனித்து சேவல் சின்னத்தில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

ஆகையயால் இம்மாநகர சபைக்கான தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள  தமிழ் பேசும் மக்கள்
மற்றுமின்றி சகோதுவரத்துடன் எம் மக்களுடன்
இணைந்து வாழும் அனைவரும் இ.தொ.காவின் சேவல் சின்னத்திற்கு வாக்களிக்க
கேட்டுக்கொள்கிறேன்.
அதே வேளையில் இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு காத்திரமான
தலைமைத்துவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றது.
அந்த வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக புதிய தேர்தல் முறையை தேர்தல்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தேர்தலானது நமது சமூகத்தின் இருப்பு, அடையாளம்,அரசியல் பலம் என்பனவற்றை
நிலைநிறுத்தி கொள்ள சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
அத்துடன் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றியீட்ட செய்வதின் மூலம் கடந்த காலங்களில்
பின்தள்ளப்பட்ட எமது பிரதேசத்தின் பகுதிகளில்  அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான ஒரு
இலக்கை அடையமுடியும் என்றார்.
இது நமது  நிலம் இங்கு வாழ்வும் இந்த நிலத்தை ஆளவும் நமக்கு உரிமைகள் உண்டு" என்ற
கொள்கையை கொண்டு காங்கிரஸ்  எம்மால் ஆட்சியமைக்க கூடிய நுவரெலியா மாநகர சபையில்
எமது தனித்துவமான அரசியலுக்கு சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
நமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு காங்கிரசுக்கு உள்ளது.
எதிர்வரும் காலத்தில் நுவரெலியா மாநகரம் எழில் மிகுந்த நகரமாக மாற்றம் பெறும்.
அத்தோடு  இம் மாநகரத்தின் அதிகார பகுதியில் காணப்படும் ஸ்கிராப், பம்பரகலை, லவர்சிலீப்
போன்ற தோட்டப்பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் ரேஸ்கோஸ் குடியிருப்பு பகுதி யுனிக்வீவ் பகுதி,
நேஸ்பி போன்ற பகுதிகள் அபிவிருத்திகளும்   நவீன திட்டமிடல் ஊடான அபிவிருத்தியில்
மேலோங்கும்.
அதேபோல் இம்மாநகரத்தின் முழுமையான பகுதிகள் இங்கு வாழ்கின்ற மக்களின் நலன் கருதியே
அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதுடன் ஒவ்வொரு வேலைத்திட்டமும் எந்தவோர் பாகுபாடும்
இன்றி சமமாகவே முன்னெடுக்கப்படும்.
எனவே மிக நீண்ட காலத்துக்கு பின் தமிழ் முதல்வர் ஒருவரின் ஆட்சியில் இம் மாநகர ஆட்சியை
கைப்பற்றி தன்மானத்தோடு வாழ சேவல் சின்னத்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று
அவர் மேலும் தெரிவித்தார்.
புஸ்பராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here