முள்ளியவளையைச் சேர்ந்த அகிலம் அக்கா என்பவர் 71 வயதிலும் சாதனை படைத்து வருகிறார்.
சிறுபராயம் முதல் விளையாட்டில் அதிக ஈடுபாடுகொண்ட அவர், வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்து வருவதுடன், இலங்கையின் முன்னிணி வீரர்களையும் வீழ்த்தி வாகை சூடியுள்ளார்.
அண்மையில் நடந்த 5000மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார்.
ஜனவரி 14ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
விளையாட்டில் சாதிக்கத்துடிப்போருக்கு வயது ஒரு தடையல்ல என அவர் கூறுகிறார்.