டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

0
248

தொழிலாளி ஒருவருக்கு வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க கோரி அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று 30.03.2018 ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.குறிப்பாக இத்தோட்ட தொழிலாளரான எம்.மூர்த்தி என்பவருக்கு தோட்ட அதிகாரியால் கடந்த மாதம் 20 ம் திகதி அன்று கங்கானி ஒருவரை தவராக பேசியதாக தெரிவித்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

அதன் பின் இதுவரை குறித்த நபருக்கு தோட்ட அதிகாரியால் தொழில் வழங்கப்படாததால்உடனடியாக தொழில்  வழங்கப்படவேண்டும் என கோரியே ஆரப்பாட்டம் முன்னெடுத்ததாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் தோட்ட தேயிலைக்கொழுந்து மடுவத்துக்கு முன்னால் இன்று காலை 09 மணியளவில் இடம்பெற்றது. இதில் 300 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

20180330_065250 20180330_065546 20180330_072935 20180330_073303 20180330_073311

இவ்வார்ப்பாட்டத்தில் தோட்ட அதிகாரிக்கு இடமாற்றம் கொடுக்கும் வரை தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

குறித்த தொழிலாளி தனது வாய்பேச முடியாத 09 வயது ஆண் குழந்தையுடன் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்துக்கு முன்னால் இன்று காலை 08 மணியளவில் குழந்தைக்கும் தனக்கும் மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தபோது பொதுமக்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த பொதுமக்கள் மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரியும் முயற்சித்தபோதிலும் தோட்ட அதிகாரி இனங்கவில்லை இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிக்கு எதிராக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here