77 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம்பெறாது!

0
19

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இந்த ஆண்டு இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படாது.இந்த ஆண்டு நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here