வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மதுபான போத்தல்கள் ஒருத்தொகையை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்
தலவாக்கலையிலிருந்து லிந்துலை நோனா தோட்ட பகுதிக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதே 28.04.2018 மாலை 3.30 மணியளவில் 48 சாராயம் போத்தல்களும் 24 பியர் டின்களையும் கைப்பற்றியுள்ளனர்
வெசாக் தினத்தை முன்னிட்டு 29 திகதி முதல் மதுபான சாலைகள் மூடப்படுகின்ற நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான கொண்டு சென்ற போதே அதிரடிப்படையினரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் மதுபானம் கொண்டு சென்ற முச்சக்கரவண்டியையும் லிந்துலை பொலிஸாரிடம் அதிரடிபடையினர் ஒப்படைத்துள்ளனர்
சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்