8ம் தரத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடநெறி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

0
176

2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தரம் 10 இல் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டின் தேவைகளை இளைஞர்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

காலாவதியான பரீட்சை நிலைய கல்வி முறையிலும் சிறு திருத்தங்களைச் செய்து தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

முறைமை மாற்றங்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களும் இத்தகைய மாற்றங்களை கோருகின்றனர், கல்வி மாற்றத்தில் புரட்சிகர மாற்றங்களை நடைமுறைப்படுத்த தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here