998 ரூபாவுக்கு புதிய நிவாரண பொதி

0
123

லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 998 ரூபாவுக்கு புதிய நிவாரண பொதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த நிவாரண பொதியில், 5 கிலோ கிராம் நாட்டரசி, 400 கிராம் நூட்ல்ஸ், 100 கிராம் நெத்தலி கருவாடு, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்குவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா்.

மேலும், ஏனைய வர்த்தக நிலையங்கள் மூன்றில் இந்த நிவாரண பொதியை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, நுகர்வோருக்கு இதனூடாக 1072ரூபா, 1084 ரூபா அல்லது 531 ரூபா இலாபத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.

சதொச விற்பனை நிலையம் இல்லாத பிரதேசங்களிலுள்ள மக்கள் 1998 என்ற துரித இலக்கத்துக்கு அழைக்க முடியும் என்பதுடன், 48 மணநேரத்தில் வீட்டுக்கே இந்த நிவாரண பொதி விநியோகிக்க முடியுமென தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, விநியோக கட்டணமாக 200 ரூபா அறவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here