மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய மனைவி

0
155

இரண்டு பெண்களை மணந்த மதகுரு ஒருவர், மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுவந்த நிலையில், அவருடைய பிறப்பு உறுப்பை இரண்டாவது மனைவி கத்தியால் துண்டாக்கி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள சீகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மௌலவி வகில் அஹ்மத் (வயது-57) இவர் ஒரு மதகுரு ஆவார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி அவர்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மௌலவி 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை (ஜூன் 24) அவருடைய இரண்டு மனைவிகளிடமும் தெரிவித்த போது மனைவிகள் இருவருக்கும், மதகுருவுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு எடுத்துக்கூறியும் மதகுரு 3வது திருமணம் செய்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார். மதகுருவின் இந்த முடிவு, அவருடைய இரண்டாவது மனைவிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதகுருவுடன் அவர் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்படவே அவர் இரண்டாவது மனைவியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அன்றிரவு மதகுருவான நித்திரையில் இருந்த போது கோபத்தில் இருந்த அவருடைய இரண்டாவது மனைவி கத்தி ஒன்றை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி இருக்கிறார். இதன் காரணமாக அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் துடிதுடித்து மரணமடைந்துள்ளார்.

மதகுருவின் கொலையை மறைக்கும் வகையில் செயல்பட்ட மனைவிமார் அவரின் உறவினர்களின் உதவியுடன் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தார். இருப்பினும் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

விசாரணைகளை அடுத்து பொலிசார் மதகுரு கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மதகுருவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலையை செய்த இரண்டாவது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதகுருவின் பிறப்பு உறுப்பை துண்டாக்கிய இரண்டாவது மனைவியின் கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here