கொட்டக்கலை நகரில் சிறுமியின் கழுத்திலிருந்த சங்கிலியொன்றை அறுத்தெடுத்து தப்பித்து சென்ற திருடனை குறித்த பகுதி மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
21/09/2021 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் கொட்டக்கலை நகரத்தில் சிறுமியின் சங்கிலியை அறுத்தெடுத்து கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் வீட்டுக்கருகில் ஒளிய அருகிலிருந்த மக்கள் கொடுத்த தகவலை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் குறித்த திருடனை மடக்கி பிடித்துள்ளனர். குறித்த திருடன் திம்புள பத்தனை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த திருடன் கிரேட்வெஸ்ரன் பகுதியை சேர்ந்தவரென தெரிய வந்துள்ளதுள்ளதோடு அறுக்கப்பட்ட சங்கிலியில் ஒருபகுதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்