ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். ஆசிரிய தின வாழ்த்து.

0
246

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் இந்நள்ளாளில் தமது அவர்களின் நீண்டகால கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் அதுமட்டுமல்லாது அவர்களின் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குமென மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வாநாதன் குறிப்பிட்டார்.

கொரோனா சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்விக்காக தங்களை அர்பணித்து இரவு பகலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்கள் பட்ட பாடு இன்றியமையாதது.பல வருடங்களாக தங்கள் உரிமைக்காக போராடி இன்றும் போராடி வருகின்றனர்.ஆசிரியர்களின் போராட்டத்தை கைவிட்டு விடாமல் அரசாங்கம் அவர்களின் போராட்டத்திற்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.

பல சாதனையாளர்களையும்,சரித்திர நாயகர்களையும், நாட்டிற்கும், வீட்டிற்கும் நற்பிரஜைகளை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்நாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதாக மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here