இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பாரிய ஸ்தானத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு ஆரம்ப காலங்களில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை தொடர்ந்தும் வெற்றிகரமான நட்புறவை உருவாக்குவதற்கு இ.தொ.காவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் முன்னின்று செயற்படுவதாக இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இலங்கைக்கும்,
இந்தியாவுக்குமிடையிலான நட்பு இன்று அல்ல ஆதிகாலம் தொட்டே காணப்படுகின்றது. இந்நிலையில் அந்நட்பு அமரர் கருப்பையாபிள்ளை தொண்டமான் வழிவந்து அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ,அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஊடாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழியே தொடர்ந்து வருகின்றது.
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியின் வருகையும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நட்புறவை பேணும் வகையிலேயே காணப்படுகின்றது. அதன்போது இ.தொ.காவின் வளர்ச்சி பற்றியும், மலையக அபிவிருத்தி சம்பந்தமாகவும் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
கடந்த மாதத்தில் இந்தியாவில் தமிழக முதலமைச்சர் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்துள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. எனவே இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவை மேலும் விஸ்தரிக்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இ.தொ.காவும் என்றும் காணப்படுமென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டார்.



