நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி இன்று மலையக கல்வி நிறுவனங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நவராத்திரி பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் இன்றி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களின் பங்களிப்புடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைபெற்றன.

நவராத்திரியின் இறுதிநாளான இன்று பாடசாலைகளில் சரஸ்வதி பூஜையும் விஜயதசமி விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றன. ஹட்டன் கல்வி வலயத்தின் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் சரஸ்வதி பூஜையும் விஜயதசமி விழாவும் பாடசாலையின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தலைமையில் பாடசாலையில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
இதன் போது விநாகர் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கும்பங்கள் வைக்கப்பட்டு வெளி வீதி வலம் இடம்பெற்று அதனை தொடர்ந்து விநாயக பெருமானுக்கு பால் தேன்,நெய்,பஞ்சாமிர்தம் சந்தனம் திருநீர் மஞ்சள் உட்பட பல்வேறு அபிசேக பொருட்களால் அபிசேகங்கள் இடம்பெற்று முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜைகளும் இடம்பெற்றன.

இதன்போது வீரத்தினை தரக்கூடிய துர்கா தேவிக்கும் செல்வத்தை தரக்கூடிய லக்சுமி தேவிக்கும், கல்வி அருளக்கூடிய சரவஸ்வதி தேவிக்கும் விசேட நவராத்திரி பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜையினை தொடர்ந்து ஆலயத்தில் வைப்பிலிடப்பட்ட நிதிக்கு கிடைக்பெற்ற வட்டியினால் 2020 ஆண்டு க.பொ.த சாதார தரத்தில் சித்தி பெற்று வறுமை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் பெறுமதியான புலமை பரிசில் திட்டம் ஒன்று வழங்கி வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிட்டத்தக்கது.

குறித்த நிகழ்வுகளை தொடர்ந்து அதனை தொடர்ந்து வித்தியாரம்பமும் இடம்பெற்றன. சுகாதார பொறிமுறைக்கமைய நடைபெற்ற குறித்த நவராத்திரி கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நடைபெற்ற நவராத்திரி விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை எனினும் ஒரு சில பாடசாலைகள் கலைநிகழ்ச்சிகளை வட்சப் செயலியின் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,
கே.சுந்தரலிங்கம்.



