இலங்கை விவசாயிகள் சங்கம் புது பொழிவுடன் நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கான சேவையை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது.
இதன் நிகழ்வு நுவரெலியா லவர்சிலிப் தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கை விவசாயிகள் சங்க பயிற்சி காரியாலயத்தில் சங்கத்தின் பொது செயலாளர் மாதவன் சுரேஷ்குமார் தலைமையில் (28) காலை இடம்பெற்றது.
இதன் போது நாட்டில் நிலவும் கொரோனா பேரிடர் காரணத்தினாலும்,உரத்தட்டுப்பாட்டினாலும் தமது விவசாய கைத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருந்த இளம் விவசாயிகளை ஊக்குவிக்கும் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் முதல்கட்டமாக விவசாய சங்க அங்கத்தவர்கள் 35 பேருக்கு வங்கி கடன் வழங்கும் நடவடிக்கைக்கான கணக்குகள் ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்றையத் தினம் ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியாவில் பல வருடங்கள் இயங்கி வந்த இலங்கை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும்,நுவரெலியா மாநகர சபை பிரதி மேயராகவும் இருந்து வந்த தொழிற்சங்கவாதி தனுஷுக்கு மாதவன் காலம்சென்ற பின்னர் சிறிது காலம் இலங்கை விவசாயிகள் சங்கத்தின் நடவடிக்கைள் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சங்கத்தின் பொதுச்செயலாளராக அமரர் டி.மாதவனின் புதல்வர் மா.சுரேஷ்குமார் பதவியேற்றார் பின் இன்று (28) காலை சங்கத்தின் செயற்பாடுகள் புது பொழிவுடன் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் கடந்த காலங்களைப் இலங்கை விவசாயிகள் சங்கத்தின் ஊடாக விதை உருளைக் கிழங்குகள்,மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்க வங்கி கடன் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என புதிய பொதுச் செயலாளர் மா.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
டி. சந்ரு



