நாவலப்பிட்டி நகரில் சீமெந்து பொதி ஒன்று 1400 ரூபாய்.

0
313

நாவலப்பிட்டி நகரில் சீமெந்து பொதி ஒன்று 1400 ரூபாய்:
நுகர்வோர் அதிகாரசபை கண்டுகொள்வதில்லை மக்கள் விசனம்

நாவலப்பிட்டி நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீமெந்து பொதிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நாவலப்பிட்டி நகரில் காணப்படுகின்றது. நாவலப்பிட்டிய நகரில் தொளஸ்பாகே வீதியில் கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்கின்ற சில விற்பனை நிலையங்களில் சீமெந்து பொதி ஒன்று 1375 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் உரிய பற்றுச்சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும் நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் இவ்விடயம் தொடர்பில் எவ்வித அக்கறையுமின்றி செயல்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே நாவலப்பிட்டி நகரில் சீமெந்து பொதிகளைக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்ற வியாபாரிகளின் அனுமதிப்பத்திரத்தை சீமெந்து பொதிகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here