லிந்துலை எல்ஜினில் மாதா சுரூபம் உடைப்பு.

0
246
லிந்துலை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ஜின் தோடத்தில் பாலத்திற்கு அருகாமையில் உள்ள மாதா சுரூபம் உடைக்கப்பட்டுள்ளது.
 26.11.2021 இரவு  இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு ஆற்றங்கரை ஓரத்தில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக  மலையக  பகுதிகளில்  சிலைகள்  இனந்தெரியாத  நபர்களால்  உடைக்கப்பட்டு  வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சம்பவம்  தொடர்பாக லிந்துலை  பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பா.பாலேந்திரன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here